Showing posts with label சீர்கேடுகள். Show all posts
Showing posts with label சீர்கேடுகள். Show all posts

Tuesday, August 3, 2010

இன்றைய இந்தியா . . . !

             லால்பகதூர் சாஸ்திரி என்றொரு மாமனிதர் இந்திய அரசியலில் பல்வேறு தியாகங்களைப் புரிந்து தனக்கென இடம் பிடித்தவர். முன்னாள் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி, ஜவாஹர்லால் நேருவின் அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக 1951 முதல் 1956 வரை பணியாற்றியவர்.1956-ல் மகபூப் நகர் என்ற இடத்தில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்தனர். சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பெரிய ரயில் விபத்து இதுதான். விபத்தைத் தொடர்ந்து, அந்தத் தவறுக்கும் உயிரிழப்புக்கும் தார்மிகப் பொறுப்பு ஏற்றுத் தனது பதவியைத் துறக்க முன்வந்தார் அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி. ஆனால், பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சாஸ்திரியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.அடுத்த மூன்றாவது மாதமே, 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி இன்னொரு பயங்கரமான ரயில் விபத்தை இந்தியா சந்திக்க நேர்ந்தது. அரியலூர் பாலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 129 பேர் இறந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த முறை, இனியும் அமைச்சராகத் தான் தொடர்வது சரியல்ல என்று லால்பகதூர் சாஸ்திரி தீர்மானமாகச் சொன்னபோது, பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு சொன்ன வார்த்தைகள், இன்றைய ஆட்சியாளர்கள் அனைவருக்குமே பாடமாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?""எங்கேயோ நடந்த தவறுக்கு, அந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஏன் ராஜிநாமா செய்து பொறுப்பேற்க வேண்டும் என்று சிலர் கேட்கக்கூடும். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் தார்மிகப் பொறுப்பேற்கும்போதுதான், அவரது தலைமையில் இயங்கும்  அத்தனை பேருமே பொறுப்புடன் செயல்படுவார்கள். நாம் குடிமக்களின் நலனுக்காகப் பதவி வகிப்பவர்கள். அவர்களது நலனைப் பாதுகாக்க அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். இதை மனதில் கொண்டு, தார்மிகப் பொறுப்பேற்று ராஜிநாமா செய்திருக்கும் லால்பகதூர் சாஸ்திரியின் முடிவு, வருங்கால சுதந்திர இந்தியாவில் பதவிக்கு வரும் மக்கள் தொண்டர்கள் அனைவருக்கும் நல்லதொரு முன்னுதாரணமாக அமையும். மனதைக் கல்லாக்கிக் கொண்டு ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியின் ராஜிநாமாவை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று பிரதமர் ஜவாஹர்லால் நேரு தந்த விளக்கத்தை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனை அடைவதில் அர்த்தம் இல்லை. காரணம்,இவர்கள் அவர்கள் அல்லவே!கடந்த மே மாதம் 28-ம் தேதி மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில் 146 உயிர்கள் பலியானபோது, அது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் சதிச் செயல் என்பது ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாகத் தெரிந்தது. இதோ, திங்கள்கிழமை மீண்டும் கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ. தூரத்திலுள்ள சைந்தியா ரயில் நிலையத்தில் நடந்திருக்கும் விபத்து நிச்சயமாக எந்தத் தீவிரவாதப் பின்னணியும் இல்லாதது என்பதும் தெள்ளத் தெளிவு.சைந்தியா ரயில் நிலையத்திலிருந்து வனாஞ்சல் விரைவு ரயில் அப்போதுதான் புறப்படுகிறது. அந்தநேரத்தில், சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர் பங்கா விரைவு ரயில் அதே தண்டவாளத்தில் விரைந்து வந்து, வனாஞ்சல் விரைவு ரயிலில் மோதுகிறது.இரவு நேரம். எல்லோரும் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்கள். நமது இந்திய அரசின் பார்வையில், வசதி இல்லாத, முன்பதிவு செய்யாத, செய்ய வழியில்லாத பராரி ஏழைகள் மனிதர்களே அல்லவே. அவர்களை நாம் இந்தியக் குடிமக்களாகக் கருதுவதே கிடையாதே. அதனால்தானே, ரயில் எஞ்சினுக்கு அருகே உள்ள முதல் மூன்று பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளாக இணைக்கப்படுகின்றன. எந்த விபத்து ஏற்பட்டாலும் முதல் பலி, இவர்களாகத்தான் இருக்கும்.தூங்கி வழிந்து கொண்டு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அடைந்து கிடந்த சாதாரண இந்தியக் குடிமக்களை மரணம் எதிர்பாராதவிதமாகத் தாக்கியதன் பின்னணியில் இருந்தது சதியல்ல. பொறுப்பற்ற தனம்.ஒரு தண்டவாளத்தில் ஒரு ரயில்தான் பயணிக்க முடியும். அப்படியானால், தூக்கக் கலக்கத்தில் உத்தர் பங்கா விரைவு ரயில் வருவதை எதிர்பார்த்து முறையாக சிக்னலைப் போடாமல் விட்டு விட்டார்களா? இல்லை, சிக்னல் இருப்பதைக் கவனிக்காமல் உத்தர் பங்கா விரைவு ரயிலின் ஓட்டுநர் அதே தண்டவாளத்தில் வந்துவிட்டாரா? சிக்னல் போடப்பட்டிருந்தால் தண்டவாளம் தானாகவே இன்னொரு நடைமேடைக்கு உத்தர் பங்கா ரயிலைத் திருப்பிவிட்டிருக்க வேண்டுமே, ஏன் அப்படிச் செய்யவில்லை?அதெல்லாம் போகட்டும். சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர் பங்கா விரைவு ரயில் மெதுவாகத்தானே நுழைந்திருக்க வேண்டும். விரைவாக வந்ததன் காரணம் ரயிலில் ஓட்டுநர் தூங்கி விட்டதாலா? இதற்குப் பதில் சொல்ல அந்த ஓட்டுநர் இப்போது உயிருடன் இல்லை.ரயில்வே லாபத்தில் ஓடுகிறது என்று பெருமை தட்டிக் கொள்ளும் ரயில்வே நிர்வாகம், மிக அதிகமான அளவில் எல்லா ரயில்களிலும் பெட்டிகளை அதிகரித்திருக்கிறது. எல்லா தடங்களிலும் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரக்கு ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல, தண்டவாளங்களின் தரமும் (க்வாலிடி), பலமும் (ஸ்ட்ரென்க்த்), சக்தியும் (பவர்) அதிகரித்திருக்கிறதா என்பது சந்தேகமே.பழைய தண்டவாளங்களில், பழைய தொழில்நுட்பங்களுடன் கணக்கு வழக்கில்லாமல் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து லாபம் காட்டுகிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. அதன் விளைவுதான் இத்தனை விபத்துகள் என்று ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எச்சரிப்பது கேட்கிறது.கடந்த பத்து மாதங்களில் இதுவரை 14 ரயில் விபத்துகள் நடந்தேறிவிட்டன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி விட்டன. இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நேரமில்லை. அவருக்கு மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றி, முதல்வர் பதவியில் அமர்வது மட்டும்தான் ஒரே குறிக்கோள். இந்த ரயில் விபத்தைக்கூட மேற்குவங்க அரசின் கையாலாகாத்தனம் என்று அவர் வர்ணிக்க முற்படலாம்.மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய இன்னொரு லால்பகதூர் சாஸ்திரியும் அல்ல; மன்மோகன் சிங் அதை ஏற்றுக்கொள்ள பண்டித ஜவாஹர்லால் நேருவும் அல்ல. இன்றைய இந்தியா, அன்றைய தலைவர்கள் கண்ட கனவும் அல்ல!



நன்றி: தினமணி நாளிதழ்

Monday, August 2, 2010

எண்ணிக்கை பெரிதல்ல...!

                   இந்திய அளவில் பள்ளிப் படிப்பை முடிக்கும் 22 கோடிப் பேரில் 12.4 விழுக்காடு மாணவர்கள்தான் கல்லூரி வாசலைத் தொடுகின்றனர். உயர்கல்விக்கு வருவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கக் காரணம், உயர் கல்வி தனியார்மயமாகிப் போனதால் ஏற்பட்டுள்ள மிகஅதிகமான கல்விக் கட்டணம்தான். இது ஒருபுறம் இருக்க, இந்த 12.4 விழுக்காடு பேரும்-அதாவது சுமார் 4.5 கோடிப்  பேர்-தொழில்திறன் பெற்றவர்களாக இருக்கிறார்களா என்றால், இதற்குக் கிடைக்கும் பதில், மிகமிகக் குறைவு என்பதுதான். கலை அறிவியல் பட்டம் பெறுவோர் மட்டுமல்ல, பொறியியல் பட்டம் பெறுவோர்கூட ஏட்டளவில் மதிப்பெண் பெறும் புத்தகத் திறனாளர்களாக இருக்கிறார்களே தவிர, அவர்கள் செயல்திறனாளர்களாக இல்லை. அவ்வாறு அவர்களுக்குச் செயல்திறனைக் கற்றுத்தரும் நிலையங்களாகப்  பல்கலைக்கழகங்களும் அவற்றின் பாடத்திட்டம், கற்பித்தல் முறை எதுவுமே பெரிய மாறுதலைக் காணவில்லை.     

             மேலும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமன்றி, கலை அறிவியல் கல்லூரிகளில்கூட தரமான, கல்வியில் ஈடுபாடுள்ள ஆசிரியர்கள் குறைந்து வருகிறார்கள் என்பதும், இவ்வாறாக வெறும் திறமை பெறாத பட்டதாரிகள் உருவாக ஒரு முக்கிய காரணம். இப்போது பணியில் இருக்கிற பேராசிரியர்கள் முழு ஈடுபாட்டோடும், மனசாட்சியோடும் பணியாற்றினாலே போதும், இந்தப் பட்டதாரிகளைத் திறமை பெற்றவர்களாக மாற்றிவிட முடியும். அத்தகைய விடியல் ஏற்படும் என்கிற நம்பிக்கை வெறும் ஏக்கமாகவே ஆகிவிடும் போலிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலும்கூட, இந்திய இளைஞர்கள் திறமையாக இருக்கவே செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய இளைஞர்கள்-பெரும்பாலும் பொறியியல், கணினி, மருத்துவம் சார்ந்த துறைகளில் இயல்பாகவே கல்வியோடு திறமை பெற்றவர்களாகவும் வெளிவரத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்களை, அப்படியே அள்ளிச் செல்ல-அறிவுக் கடத்தல் என்றும் சொல்லலாம்-பன்னாட்டு நிறுவனங்கள் தயாராகக் காத்திருக்கின்றன. இவர்கள் இந்தியாவிலேயே பணியாற்றினாலும்கூட, அவர்கள் பன்னாட்டு நிறுவனத்துக்காக இந்தியாவில் ஊழியம் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2005-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவின்படி, இந்தியாவில் சிறந்த தொழில்திறன் பட்டதாரி உருவாக ஆகும் செலவு அமெரிக்க மதிப்பில் 20,000 டாலர்கள் மட்டுமே. இவ்வளவு குறைந்த செலவில் அவர்களால் ஒரு அமெரிக்கனை தொழில்திறன் பெற்ற பட்டதாரியாக உருவாக்குவதை கனவிலும் கருதிட முடியாது. ஆகவே, இந்தியாவின் மிகச் சிறந்த பட்டதாரிகளை அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள். இவ்வாறாக இந்திய அறிவு கொள்ளை போவதால், இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பின் அளவு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்! இப்போது இந்த அளவு மேலும் உயர்ந்திருக்கும்!தற்போது நடைமுறைக்கு வரக் காத்திருக்கும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள் சொல்லும் வாதம், இந்திய இளைஞர்கள் வெளிநாடுபோய் படிப்பதால் இந்தியாவுக்கு ஏற்படும் அன்னியச் செலாவணி இழப்பு ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதுதான். ஆனால் இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே கல்விக் கடை விரிக்கும்போது, தங்கள் நாடுகளில் வேலை உறுதி என்கிற இனிப்பைக் காட்டி, இந்தியாவின் சிறந்த அறிவார்ந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துச் செல்லப்போகிறார்கள். சிறந்த இளைஞர்களை இழக்கப்போவது இந்தியாவாகத்தான் இருக்கும்.நிலைமை இதுவாக இருக்கும்போது, 2020-ம் ஆண்டில் கல்லூரி செல்வோர் எண்ணிக்கையை 6 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக புதிதாக 800 பல்கலைக்கழகங்களும், 35,000 புதிய கல்லூரிகளும் உருவாக வேண்டும் என்றும் இலக்குகளை அறிவித்துள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல்.சொல்லித்தர நல்ல, திறமையான, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. உயர் கட்டணங்களைக் கட்டுப்படுத்தவும் அரசு முயற்சி செய்யவில்லை. பாடத்திட்டங்களும் பழையபடிதான் இருக்கின்றன. அமைச்சர் சொல்லும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் நிச்சயமாகத் தனியாரால் மட்டுமே நிறுவப்படும். இவர்கள் போட்டி போட்டு மாணவர்களைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டு, பெயருக்குப்  பட்டம் வழங்கி வெளியே அனுப்பினால் இவர்கள் என்ன தொழில்திறன் பெற்றிருப்பார்கள்? இவர்களுக்கு யார் வேலை தர முன்வருவார்கள்?இந்த வேளையில், நமக்குச் சமமான மக்கள்தொகை உள்ள சீனாவில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தாக வேண்டியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் அண்மையில், நடுத்தர மற்றும் நீண்ட கால திறன் மேம்பாட்டுத் திட்டம் (2010-2020) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், 2008-ம் ஆண்டு 9.2 விழுக்காடாக இருக்கும் திறன்கொண்ட, பயிற்சிபெற்ற பணியாளர் எண்ணிக்கையை, 2020-ம் ஆண்டில் 20 விழுக்காடாக உயர்த்துவதுதான். 2020-ல் சீன அரசு ஊழியர்களில் 85 விழுக்காட்டினர், நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படித்தவர்களாக இருக்கும் நிலையை உருவாக்குவதும், உயர்கல்வி பெற்றவர்களில் 30 லட்சம் பேரை, விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கிராமங்களுக்கு அனுப்புவதும் இந்தத் திட்டத்தின் நோக்கம்.ஆனால், இந்தியாவிலோ வெறும் எண்ணிக்கையைப் பெருக்குவதில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டுகிறது. இப்போதே, பட்டதாரிகள் பலரால் நேர்காணல்களை எதிர்கொள்ள முடியாத, வேலையில்லாத நிலை உருவாகிவிட்டது. இந்தப் புதுக்கூட்டத்தில் பொறியியல் பட்டதாரிகளும்கூட சேர்ந்து கொண்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் எண்ணிக்கையைக் கூட்டுவதில் ஆர்வம் காட்டாமல், திறமையும் தொழில்அறிவும் பயிற்சியும் பெற்றிருக்கும் பட்டதாரிகளை உருவாக்குவதுதான் இன்றியமையாத் தேவை. வெறுமனே பட்டதாரிகள் எண்ணிக்கையைக் கூட்டினால் அது, தனியார் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும். பட்டம் பெறுவோரின் வீட்டுப் பொருளாதாரத்தையோ, நாட்டுப் பொருளாதாரத்தையோ மேம்படுத்த உதவாது.




நன்றி:

தினமணி நாளிதழ் . . 

Saturday, May 8, 2010

காதலை கொச்சைப்படுத்தாதீர்கள் . . .

                 தமிழகத்தின் கலாசாரச் சீர்கேட்டிற்கு மற்றுமொரு உதாரணம். தினமணி நாளிதழில் தலையங்கமாய் வந்துள்ளது. திறம்பட எடுத்து இயம்பியதற்காய் ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள். தினமணியின் கட்டுரையை அவர்களது நடையிலேயே தந்துள்ளேன்.


        தமிழக உள்துறை அமைச்சகம் சார்பில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கும் கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள சில தகவல்கள் தமிழகத்தையே வெட்கப்பட வைப்பன. ஏழைகளுக்கு இலவச நிலம், வறிய குடும்பங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி என்று ஆயிரம் நல திட்டங்களை அமல் செய்தாலும் தமிழகம் போகும் பாதை சரியில்லை என்பதையே உள்துறை அமைச்சகத்தின் குறிப்புகள் உணர்த்துகின்றன.
        தனிநபர் வருமானத்திலும், கல்வியிலும், சுகாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாடு என்னதான் முன்னிலை வகித்தாலும் ஒழுக்கக் குறைவான சம்பவங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்றால் நாம் எப்படி தலைகுனியாமல்  இருக்க முடியும்
                 2007 முதல், காதல் விவகாரத்தால் நடைபெறும் கொலைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதுதான் அது. 2007-ல் 123 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2009-ல் 217 ஆக அதிகரித்துள்ளது.
                 கடந்த ஓராண்டில் மட்டும் 1,600 கொலைகள் நடந்துள்ளன. குடும்பச் சண்டைகளால் 453 கொலைகளும், அற்பச் சண்டைகளால் 372 கொலைகளும் நடந்துள்ளன.2007-ல் 1,521 ஆக இருந்த கொலைகளின் எண்ணிக்கை 2009-ல் 1,644 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் ஜாதிச் சண்டைகளில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
                        இதில் மிகவும் கவலை தரத்தக்கது எதுவென்றால் காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்து வருவதுதான். இந்தக் கொலைகள் அதிகரித்ததற்கு என்ன காரணம் என்று கேட்டால், தமிழக முதல்வர் பாணியில் காதல்தான் காரணம் என்று கூறிவிடலாம். இந்தக் காதலில் முறையான முதல் காதல், ஒரு தலைக்காதல், பொருந்தாக் காதல், கள்ளக் காதல் என்று வகைகள் பல இருக்கலாம். களவியல் என்பது தமிழருக்குப் புதியதல்லவே என்று இலக்கிய நயத்தோடு இதை புறந்தள்ளிவிட நினைக்கலாம். தமிழர்களின் தனிச்சிறப்பே காதலும் வீரமும்தான் என்பதை ஒப்புக் கொண்டாலும், தமிழனுக்கு மானமும் முக்கியம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
                   இன்றைக்கு தமிழ்நாட்டில் கல்வி அறிவு நன்றாக வளர்ந்திருக்கிறது. பட்ட வகுப்புகளிலும் முதுகலை பட்ட வகுப்புகளிலும், தொழில் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அப்படி படிக்கிறவர்களும் படித்தவர்களும் காதல் வயப்படுகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. இந்தக் காதல்களுக்குப் பெரிதும் துணை புரிவது செல்போன் என்று அழைக்கப்படும் அலை பேசிகள். இதனால் வீட்டுக்குத் தெரியாமல், உறவுக்குத் தெரியாமல் சந்திக்கவும் வரம்பு மீறவும் நேர்கிறது.பருவ வயதில் இதெல்லாம் வழக்கம்தான், இதைப் போய் பெரிய விஷயமாக எடுத்துப் பேசுவதும் அறிவுரை கூற முயல்வதும் வீண் வேலை என்றே பலரும் கருதுகின்றனர். இந்தச் சமுதாயத்தில் ஒரு விஷவித்து வளர்ந்து பெரிதாகிக் கொண்டு வருகிறது, அதை இப்போதே அடையாளம் கண்டு தடுக்காவிட்டால் பிரச்னை பெரிதாகி பிறகு வெளியில் பேசக்கூட முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்று எச்சரிப்பது நம் கடமை.    
                     பள்ளி, கல்லூரி வாசல்களிலும் வீதியோரங்களிலும் காபிக் கடைகளிலும் திரையரங்குகளிலும் பூங்காக்களிலும் யாருமே வர நினைக்காத இடங்களிலும் வர முடியாத வேளைகளிலும் ஜோடி ஜோடியாக சுற்றுவதைப் பார்த்து, காதலர் பூமியான பிரான்ஸô தமிழ்நாடும் மாறி வருகிறது என்று சமுதாய பொறுப்பே இல்லாத சிலர் வேண்டுமானால் மகிழ்ச்சி அடையலாம், பொறுப்புள்ள யாரும் மெü சாட்சியாக இருக்க முடியாது.
                  இப்போது பிரச்னை முற்றி கொலைகளின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது. கொலை நடந்த குடும்பங்களைச் சற்று நினைத்துப் பார்த்தால் இதயம் வலிக்கிறது. மலரினும் மெல்லிதான விஷயம் வன்மையானதாக மாறியதற்குக் காரணம் எது? எல்லோரும் வரவேற்கிறார்போல இது இலக்கியக் காதல் அல்ல என்பதுதான் காரணம்.  
                பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாலியல் கல்வியைக் கற்றுத்தருவதற்குப் பதிலாக அவரவர்க்குள்ள சமூகப் பொறுப்பை உணர்த்துவதை முதல் வேலையாக அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.
               பள்ளி, கல்லூரிகளில் படிப்பதற்காக அனுப்பப்படும் மாணவர்களுக்கு படிப்புதான் லட்சியமாக இருக்க வேண்டும், மற்றதெல்லாம் அவர்களுடைய ஆற்றலை, அறிவை, நேரத்தைப் பாழாக்கும் வெற்று கவனச் சிதறல்கள் என்று உணர்த்தப்பட வேண்டும்.  
                 பெற்றோருக்குத் தெரியாமல் காதலிப்பதும் வீட்டைவிட்டு ஓடிப்போவதும் நண்பர்கள் மற்றும் போலீஸ் துணையுடன் திருமணம் செய்து கொள்வதும் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.    
                 முதலில் தன்னை வாழ்க்கைக்கு தகுதியானவனாக மாற்றிக்கொண்ட பிறகு, தனக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வதை வரவேற்கும் அதே நேரத்தில், கணநேர இன்பத்திற்காக வாழ்க்கையைப் பாழாக்கும் பொருந்தாத காதலை எப்படி ஏற்பது? பல ஆடவர்கள் காதல் என்கிற விளையாட்டில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்கள் காதலித்த பெண்களையும் கண்ணீரில் மூழ்கடிக்கும் அவலம் ஒரு ஆரோக்கியமான அறிகுறி அல்லவே.
                 பண்பாடற்ற காதலை வளர்க்கும் வானொலிகளுக்கு, பண்பலை என்று பொருத்தமில்லாத பெயர். வணிக நோக்கம் மட்டுமே கொண்ட இத்தகைய பொழுது போக்குச் சாதனங்களும் இளைய சமுதாயத்தைத் தவறாக வழிநடத்தும்போது அனுபவம் வாய்ந்தவர்கள் தலையிட்டு நிலைமையைத் திருத்துவது அவசியம். ஆனால் தனியார்மயம் என்கிற பெயரில் அரசே இதுபோன்ற ஒழுக்கக்கேடுகளுக்குத் துணைபோகும் அவலத்தை என்னவென்பது?
                 புள்ளிராஜா பற்றிய விளம்பரம் ஆவலைத் தூண்டி, பிறகு பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களையும் அதைப்பற்றி பேசவைத்தபோது, பள்ளி ராஜாக்களின் மீது அக்கறை செலுத்தி இத்தகைய விளம்பரங்களை வரம்போடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று இன்றைய முதல்வர் மு. கருணாநிதி எச்சரித்ததை நினைவுகூர்கிறோம்.
                   தமிழர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்தவர்கள், ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள் என்பதுதான் உலக அரங்கில் நமக்குப் பெருமைகள்ளக்காதலுக்குப் பெயர்போன தேசமாக, காதல் கொலைகளில் சிறந்த நாடாக இருப்பது பெருமையாக தோன்றவில்லை

                    அவசரக் காதலுக்கும், சந்தர்ப்பவாதக் காதலுக்கும், பொருந்தாக்காதலுக்கும் சங்க இலக்கியங்களை உதாரணம் காட்டி இழிவு படுத்தாதீர்கள்...