Saturday, February 16, 2013

என்னவள் (எ) அவள். . !







ஓராயிரம் விண்மீன்கள் என்னைக் கண்டு வியந்தது
          ஒற்றை நிலவு நீ என்னுடன் பயணித்ததால்,
உமது விழி அம்புகளின் விவேகம் தான் என்ன
          விழிவழி நுழைந்து இதயத்தை துளைத்துவிட்டதே.
படபடத்த உனது இமைகளின் தாள லயங்களில்
          எந்தன் இதயத்துடிப்பும் நாட்டியம் ஆடுகின்றதே.
உன் இதழ்களைத் தீண்ட இயலாததால்
          உதட்டுச்சாயங்கள் கூட விரக்தி கொள்கின்றதே.
உன் கூந்தலேறியதால் மலர்கள் கூட
          மேன்மை கண்டதாய் கர்வம் கொள்கின்றதே
என்னே விந்தை, வியந்து விரிந்த நெற்றிப் பரப்பு
          என்னை நோக்க நாணம் கண்டனவே.
கைகோர்க்க கைநீட்டிய தருணம் உணர்ந்தேன்
           நீயும் நானும் நாமாகிவிட்டதாய்.

Wednesday, February 13, 2013

காதலர் தின வாழ்த்துக்கள். . . !

காதல் எனும் ஆற்று வெள்ளம் தன்னில் நீந்தித்திளைத்துக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்கும், நீந்தத்துடிக்கும் உள்ளங்களுக்கும், காதல் நீரில் கால் நனைக்காமல் மணம் கொண்டவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். . . !

  





*** புரிந்ததும் புரியாததும் ***


நான் யாரென்று நீ அறிந்தும்,
நீ யாரென்று யாமறியாத போதும்,
குறுந்தகவலில் அனுப்பிய ரோசா(ரோஜா)
சொல்லிற்று என் மீதான உம் காதலை. . . !

உந்தன் அழகு முகம் தன்னைக்
எம் கண்கள் காணாத போதும்,
படபடத்த எந்தன் இருதயம்
சொல்லிற்று உன் மீதான எம் காதலை. . . !

உன் மூச்சுக் காற்று நானென்கிறாய்
நான் வடிக்கும் கவிதை நீயென்கிறேன்
மண் சேர்ந்த விழித் துளிகள்
சொல்லிற்று காதல் மீதான நம் காதலை. . . !


பி.கு: சட்டென்று மனதில் உதித்த வரிகள் மறு ஆய்வு செய்யக்கூட தோன்றவில்லை