Saturday, February 16, 2013

என்னவள் (எ) அவள். . !







ஓராயிரம் விண்மீன்கள் என்னைக் கண்டு வியந்தது
          ஒற்றை நிலவு நீ என்னுடன் பயணித்ததால்,
உமது விழி அம்புகளின் விவேகம் தான் என்ன
          விழிவழி நுழைந்து இதயத்தை துளைத்துவிட்டதே.
படபடத்த உனது இமைகளின் தாள லயங்களில்
          எந்தன் இதயத்துடிப்பும் நாட்டியம் ஆடுகின்றதே.
உன் இதழ்களைத் தீண்ட இயலாததால்
          உதட்டுச்சாயங்கள் கூட விரக்தி கொள்கின்றதே.
உன் கூந்தலேறியதால் மலர்கள் கூட
          மேன்மை கண்டதாய் கர்வம் கொள்கின்றதே
என்னே விந்தை, வியந்து விரிந்த நெற்றிப் பரப்பு
          என்னை நோக்க நாணம் கண்டனவே.
கைகோர்க்க கைநீட்டிய தருணம் உணர்ந்தேன்
           நீயும் நானும் நாமாகிவிட்டதாய்.